இந்துவா வைரலாகும் முஸ்லிம் இந்து 2 பள்ளி சிறுவர்களின் கலங்கமில்லா சிரிப்பு வீடியோ !!

இந்துவா வைரலாகும் முஸ்லிம் இந்து 2 பள்ளி சிறுவர்களின் கலங்கமில்லா சிரிப்பு வீடியோ !! வாழ்த்துக்கள் குட்டீஸ் இப்படியே வாழ்நாள் முழுவதும் இருங்கள். இவர்கள் மனதில் யாரும் நஞ்சை விதைத்து விடாதிர்கள் !

குழந்தைகள் என்றாலே ஆனந்தம் தான். அவர்களின் தூய்மையான உள்ளமும் கள்ளம் கபடமற்ற சிரிப்பும் நம்மை வெகுவாக கவரும் வண்ணம் அமையும். சில குழந்தைகள் நம்மை கவருவதில் சிறந்தவராக இருப்பார்கள் மற்றும் சிலர் அவர்களின் செயல்கள் மூலம் நம்மை பிரமிக்க வைப்பார்கள். எது எப்படி இருந்தாலும் நாம் அவர்களால் மெய்மறந்து போகிறோம் என்பது உன்மைதான். அவர்கள் விளையாடும் போது நமக்குள் ஒளிந்திருக்கும் குழந்தையும் நம்மை அறியாமல் வெளியே வந்து விடும். ஒரே தட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 2 பள்ளி மாணவர்கள் இவன் இந்து, நான் முஸ்லிம் என்று கூறி சிரித்து மகிழும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. வைரலாகி இருக்கும் அந்த பள்ளி மாணவர்கள் இருவரும் ஒரே தட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஒருநபர் அவர்களிடம் ஏதோ கேட்க, ஒரு சிறுவன் தனது நண்பனை தொட்டு “இவன் இந்து, நான் முஸ்லிம்.” என்று சொல்லி சிரிக்கிறார். அடுத்த சில நொடிகளில், “இவன் முஸ்லிம், நான் இந்து. இவன் பெயர் முனவர். நான் ஜுது” என்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு காண்போருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முழு வீடியோ கீழே உள்ளது.

By admin