இந்த டிவி நிகழ்ச்சிக்கு தளபதி விஜய் வருகிறாரா…!!

இந்த டிவி நிகழ்ச்சிக்கு தளபதி விஜய் வருகிறாரா…!! கொண்டாட்டத்திற்க்கு காத்திருக்கும் ரசிகர்கள் !!

தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து நடிகர்களையும் பின்னுக்குத் தள்ளி முண்ணனியில் உள்ளார் நடிகர் விஜய்.இவர் ரஜினியை முந்தி விட்டார் எனவும் பல்வேறு தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகிறது.இந்திய சினிமாவில் தனக்கென்று ஒரு பாணியையும் தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவரின் பீஸ்ட் படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பூஜா ஹெக்டே, செல்வ ராகவன் போன்றோர் நடித்திருக்கும் இப்படத்தின் இரண்டாவது பாடலான ஜாலி ஓ ஜிம்கானா பாடலை மார்ச் 19 ம் தேதி படக்குழு வெளியிட உள்ளதாம்.ஜாலி ஓ ஜிம்கானா பாடலை விஜய் தனது சொந்த குரலில் பாடி உள்ளார்.

ஏற்கனவே பீஸ்ட் படத்தின் ஆடியோ லான்ச் கிடையாது என்று ஊடங்களில் தகவல்கள் வெளியானது. இதனால் சோகத்தில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு தற்போது ஒரு சர்ப்ரைஸ் ஆன செய்தி வெளியாகியுள்ளது.அதாவது தலைவா படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க்க இருக்கிறார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 அன்று சன் டிவியில் பீஸ்ட் திரைப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.அதில் நடிகர் விஜய் கலந்து கொள்ள உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

By vaithy