உங்களுக்கு வேற வேலையே இல்லையா !! அனிதா சம்பத்திடம் கொந்தளித்த பாலா !!

உங்களுக்கு வேற வேலையே இல்லையா !! அனிதா சம்பத்திடம் கொந்தளித்த பாலா !!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை புதிதாக தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் சிம்பு. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் வகையில் தொடங்கப்பட்டதுதான் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதுவித ரியாலிட்டி நிகழ்ச்சி. இதுலிருந்து கமல் விலகிவிட்டார். இதை தொடர்ந்து மீதம் உள்ள நாட்களை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளார். சில தினங்களுக்கு முன்பு வைல்ட் கார்டு என்ட்ரியாக சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் kpy சதிஷ் ஆகியோர் அனுப்பப்பட்டுள்ளனர். பிக்பாஸ் அல்டிமேட் கடந்த ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து 70 நாட்கள் மட்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்பதுதான் இந்நிகழ்ச்சியின் சாராம்சம் ஆனால் இதில் சதிஷ் முந்தைய பிக்பாஸ் சீன்களில் கலந்து கொள்ளாதவர் என்பது குறிப்பிடத்தக்கது

ஜனவரி 30ம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்ட இந்த பிக்பாஸ் அல்டிமேட் 16 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீசன் 1ல் கலந்து கொண்ட ஓவியா மற்றும் பரணி ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக வரவில்லை. எனவே 14 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ஜூலி மற்றும் நிரூப்க்கு இடையில் சண்டை நடந்து கொண்டுள்ளது. அப்போது இடையில் வந்த அனிதாவிடம், அபிராமி எந்த சண்டை வந்தாலும் நீங்கள் எதையாவது உள்ளே எடுத்துக்கொண்டு வந்து ஏன் சண்டை போடுகிறீர்கள் என்று கேட்கிறார். பிறகு பாலா நீங்க ரொம்ப perfect மாதிரி பேசாதீங்க என்று அனிதாவிடம் கோபத்தை காட்டுகிறார்.

By vaithy