‘என்னங்க நீங்க பண்றது பெரிய தப்பு’… ’45 வயது கணவருக்கு வந்த விபரீத ஆசை’… ஒரே நாளில் நொறுங்கி போன குடும்பம்!

‘என்னங்க நீங்க பண்றது பெரிய தப்பு’… ’45 வயது கணவருக்கு வந்த விபரீத ஆசை’… ஒரே நாளில் நொறுங்கி போன குடும்பம்!

மனைவி இரண்டு மகன்கள் என மகிழ்ச்சியாகச் சென்ற திருமண வாழ்க்கையில் கல்லூரி மாணவி ஒருவர் குறுக்கிட மொத்த குடும்பமும் உருக்குலைந்து போயியுள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள வல்லம்பக்காடு என்ற ஊரை சேர்ந்தவர் முத்து. 45 வயதான இவருக்கு ராதா என்ற மனைவியும், அபிஷேக், அபிரித் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்த மகன் 8-ம் வகுப்பும், இளைய மகன் 4-ம் வகுப்பும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். முத்து, ராதா இருவரின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை. கல்லூரி மாணவி ஒருவரால் முத்து, ராதா வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தது.

ராஜேந்திரபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் முத்துவுக்கும் முதலில் பழக்கம் ஏற்பட்ட நிலையில், அதுவே நாளடைவில் தகாத உறவாக மாறியது. ஒரு கட்டத்தில் கணவனின் தகாத உறவு மனைவிக்கும் தெரிய வந்த நிலையில், அதுகுறித்து ராதா தனது கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் அவ்வப்போது சண்டை ஏற்பட்டுள்ளது. உங்களுக்கு 45 வயசு ஆகிறது, அது சின்ன பொண்ணு, நமக்கு 2 குழந்தைகள் வேற இருக்கிறது, இந்த வயதில் இதுபோல நீங்களே தவறான பாதைக்குச் செல்லலாமா எனக் கணவர் முத்துவை, மனைவி ராதா கண்டித்துள்ளார்.

ஆனால் மனைவியின் பேச்சைக் கேட்காத கணவர் முத்து தான் தகாத உறவு வைத்திருந்த கல்லூரி மாணவியுடன் ஊரை விட்டே ஓடிவிட்டார். இதை அறிந்த மனைவி ராதா, பெற்றோர் என்ன செய்கிறார்கள் என்பதை நன்கு உணரும் பருவத்தில் 2 குழந்தைகள் இருக்கும் இந்த நிலையிலும், கணவன் செய்த தவறை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இதையடுத்து அவர் எடுத்த தவறான முடிவு அந்த பகுதியையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குழந்தைகளை நன்றாகப் படிக்க வைத்து அவர்களை ஆளாக்கிப் பார்க்கவேண்டிய நேரத்தில், தன்னுடைய சுயசல்லாபத்திற்காக ஒட்டுமொத்த குடும்பத்தையே சிதைத்த கணவனின் செயல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.