கணவனை கழட்டிவிட்டு பிரபல நடிகருடன் ஊர் சுற்றும் நடிகை எமிஜாக்சன்!!

கணவனை கழட்டிவிட்டு பிரபல நடிகருடன் ஊர் சுற்றும் நடிகை எமிஜாக்சன்!! யார் அந்த நடிகர் தெரியுமா ??

வெளிநாட்டு நடிகை எமி ஜாக்சன், விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பிரபலம் அடைந்தார். பின்னர் அவர் தனுஷுடன் தங்கமகன் படத்திலும் தளபதி விஜய்யுடன் தெறி படத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2.0 படத்திலும் ஜோடியாக நடித்தார். அவர் சில தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்தார்.இவர் பிரிட்டிஷ் தொழிலதிபர் ஜார்ஜ் பனாயோடோவுடன் லிவிங் டூ கெதரில் இருந்தார். மேலும் 2019 ஆம் ஆண்டில் ஆண் குழந்தை ஆண்ட்ரியாஸ் ஜேக்ஸ் பனாயோடோவைப் பெற்றெடுத்தார். இந்த ஜோடிக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.

ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் பிரிந்தனர்.தற்பொழுது இந்த நடிகை தனது சமூக ஊடகப் பக்கங்களில் ஜார்ஜ் பனாயிடோவுடன் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கியுள்ளார்.இப்போது காசிப் கேர்ள் புகழ் நடிகர் எட் வெஸ்ட்விக் உடன் டேட்டிங் செய்வதாகவும் இங்கிலாந்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பரில் சவுதி அரேபியாவின் செங்கடல் சர்வதேச திரைப்பட விழாவில் சந்தித்த பிறகு இருவரும் ஒருவருக்கொருவர்காதலில் விழுந்தனர் என பிரபலங்களுக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது. அவர்கள் இப்போது ஒருவரையொருவர் தெரிந்துகொள்ள பழகி வருகின்றனர்.2018 ஆம் ஆண்டில் மூன்று பெண்களை அவர் கற்பழித்ததாக குற்றம் சாட்டியபோது அவர் சர்ச்சையில் சிக்கினார். அவர் குற்றச்சாட்டுகளை மறுத்தார் மற்றும் ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு செல்லவில்லை மற்றும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

By vaithy