கதவ திறங்க பிக்பாஸ் நான் வெளியே போகணும் கதறி அழுத வனிதா!!

கதவ திறங்க பிக்பாஸ் நான் வெளியே போகணும் கதறி அழுத வனிதா!! கலங்கிப் போன போட்டியாளர்கள் !!

விஜய் தொலைக்காட்சி என்றாலே மக்களுக்கு உடனே ஞாபகம் வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சி மீது மக்கள் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள் ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஒரு நிகழ்ச்சி 24 மணி நேரமும் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது இது ஏற்கனவே பங்கேற்ற பல மோசமான போட்டியாளர்களை மட்டுமே களமிறக்கியுள்ளது பிக்பாஸ் குழு இதனால் இங்கு பரபரப்புக்கும் சண்டைக்கும் பஞ்சமே இல்லை இந்நிலையில் தினந்தோறும் வனிதாவுக்கும் யாரோ ஒருவருக்கு பிரச்சனை ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது அதேபோல் வனிதா என்ன கூறினாலும் அது தவறுதான் என ஒரு கூட்டமே முடிவு செய்வது அவருக்கு பிடிக்கவில்லை.

அதேபோல் யார் என்ன செய்தாலும் முதலில் குரல் கொடுப்பது வனிதா தான் எனவேதான் அவர் அதிகமாக மற்றவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிறார் எனவும் ஹவுஸ் மெட்ஸ் கூறிவருகின்றனர் இந்நிலையில் பொறுத்தது போதும் என வனிதாவை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கினார்கள் அதனால் கடுப்பான வனிதா தற்போதே நான் வெளியேறப் போகிறேன் என கூச்சலிட்டு கதவை தட்டி உடைத்து கதறி அழுது கொண்டு இருந்தார் இதைப் பார்த்த சக போட்டியாளர்கள் செய்வதறியாமல் திருதிருவென முழித்தபடி அவருக்கு ஆறுதல் சொல்ல சென்றாலும் நம்மிடம் கத்துவார் என எண்ணி முணுமுணுத்து நின்றுகொண்டிருந்தனர் இறுதியாக பிக் பாஸ் ஒரு நல்ல முடிவை எடுத்து வனிதாவை வீட்டிற்கு வெளியே அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

By vaithy