வடிவேல் பாலாஜி மரணத்திற்கு காரணம் என்ன?? அவரின் உடலில் என்ன தான் பிரச்சினை? – வெளியான திடுக்கிடும் தகவல்

வடிவேல் பாலாஜி மரணத்திற்கு காரணம் என்ன?? அவரின் உடலில் என்ன தான் பிரச்சினை? – வெளியான திடுக்கிடும் தகவல்

Reasons For Vadivel Balaji Death : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி.

காமெடி நடிகராக மட்டுமில்லாமல் சிரிச்சா போச்சு கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் இவர் நடுவராகவும் பங்கேற்றுள்ளார்.

வெள்ளித்திரையில் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். தற்போது 42 வயதாகும் இவர் உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

இவருடைய மறைவு திரைத்துறை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தற்போது வடிவேல் பாலாஜி என் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன அவருக்கு என்ன பிரச்சனை என்பது குறித்த தகவல்கள் உறவினர் ஒருவர் மூலமாக தெரிய வந்துள்ளது.

அதாவது கடந்த வாரத்தில் வடிவேல் பாலாஜி சூட்டிங் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது திடீரென மயக்கம் ஏற்பட அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

வடிவேல் பாலாஜியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூளையில் ரத்தக்கசிவு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் தீவிர சிகிச்சையில் இருந்த வடிவேல் பாலாஜி சில தினங்களுக்கு முன்னர் வீடு திரும்பியுள்ளார்.

இதனையடுத்து இன்று திடீரென மீண்டும் மயக்க நிலைக்கு சென்றதால் குடும்பத்தார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வடிவேல் பாலாஜி உயிரிழந்து விட்டதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.

வெள்ளித்திரையில் காட்டிலும் சின்னத்திரையில் வடிவேல் பாலாஜி தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர். விஜய் டிவியில் இவரின் காமெடியை ரசிப்பதற்காகவே பல ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்த வடிவேல் பாலாஜியின் ஆத்மா இறைவனடியில் இளைப்பாறட்டும் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.