சூரியாவின் ரீல் மகள்.. ஸ்ரேயா சர்மாவுக்கு இன்று பிறந்த நாள்.. ரசிகர்கள் வாழ்த்து!

சூரியாவின் ரீல் மகள்.. ஸ்ரேயா சர்மாவுக்கு இன்று பிறந்த நாள்.. ரசிகர்கள் வாழ்த்து!

தமிழ் ரசிகர்களுக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்களில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சர்மா. சூர்யாவின் நடிப்பில் வெளியான சில்லுன்னு ஒரு காதல் திரைப்படத்தில் தனது சுட்டித்தனமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் இப்பொழுது கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2016ம் ஆண்டு தெலுங்கில் வெளியான நிர்மலா கான்வென்ட் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் செப்டம்பர் 9 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை வீட்டில் பெற்றோருடன் இணைந்து கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தவாறு கொண்டாடி வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரங்களும்

சினிமாவில் ஹீரோ ஹீரோயின்கள் எந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனரோ அதேபோல அதில் நடக்கும் குழந்தை நட்சத்திரங்களும் சில சமயங்களில் மக்களை வெகுவாக கவர்ந்து மிகப்பிரபலம் ஆகின்றனர்.

ஜெய் சிரஞ்சீவா

அந்தவகையில் இந்தி சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய ஸ்ரேயா சர்மா, சிரஞ்சீவி நடித்த “ஜெய் சிரஞ்சீவா” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வர ஆரம்பித்தார்.

சில்லுன்னு ஒரு காதல்

பார்க்க மிகவும் க்யூட்டாகவும் அதேசமயம் சுட்டித்தனமான நடிப்பையும் வெளிப்படுத்தி பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி வந்த ஸ்ரேயா சர்மா தமிழில் சூர்யா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற “சில்லுன்னு ஒரு காதல்” திரைப்படத்தில் சூர்யாவின் குழந்தையாக நடித்து அசத்தியிருப்பார்.

சூர்யாவின் குழந்தையாக

சில்லுன்னு ஒரு காதல் திரைப்படத்தில் ஐஷீ என்ற பெயரில் இவரின் சுட்டித்தனமான நடிப்பு இன்றுவரை பலரையும் ரசிக்க வைத்து வருவதோடு இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான குழந்தை நட்சத்திரமாக மாறினார்.

சில தமிழ் படங்களில் இவ்வாறு தமிழ் தெலுங்கு இந்தி என பல திரைப்படங்களில் குழந்தையாக வந்து நடித்து அசத்தி இருந்த ஸ்ரேயா சில்லுனு ஒரு காதல் திரைப்படத்திற்கு பிறகு எந்திரன் மற்றும் நீதானே என் பொன்வசந்தம் போன்ற மேலும் சில தமிழ் படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்து செல்வார்.

ஹீரோயினாக அறிமுகம்

இவ்வாறு பலராலும் ரசிக்கப்பட்ட குழந்தையாக வலம் வந்த ஸ்ரேயா சர்மா 2016ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான “நிர்மலா கான்வென்ட்” என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

வெளியாகாத நிலையில்

குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது ஹீரோயினாக வெற்றி வலம் வர காத்துக்கொண்டிருக்கும் ஸ்ரேயா சர்மாவை ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் திரைப்படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் சமூக வலைத்தளங்களில் க்யூட்டான புகைப்படங்களையும் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

பிறந்தநாள் கொண்டாட்டம் இன்றுவரை ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ரேயா சர்மா செப்டம்பர் 9 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை பெற்றோருடன் வீட்டில் மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் பலரும் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.