ஜூலியை ஆபாச வார்த்தையில் திட்டிய நிரூப் ,, வெளியேற்றுகிறாரா சிம்பு //

ஜூலியை கண்டபடி ஆபாச வார்த்தைகளில் சீண்டிய நிரூப்…. அத்துமீறும் ஒழுங்கை கண்டிப்பாரா சிம்பு ..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி செம வெற்றி கண்ட நிலையில் தற்போது ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். பிக்பாஸ் முந்தைய சீசனில் இருந்த போட்டியாளர்களின் சர்ச்சைக்கு வித்திட்ட முக்கிய போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து இந்த பிக்பாஸ் அல்டிமேட்டில் மொத வைத்துள்ளனர்.வனிதாவின் இருந்தது தாமரை வரை கிட்டத்தட்ட 14 போட்டியாளர்கள் முதலில் களமிறங்கினர். பின்னர் இதுவரை கலந்து கொள்ளாத சதீஷும் வைல்டு கார்டு போட்டியாளராக உள்நுழைந்தார். பிக்பாஸ் சீசன் 5 வரை தொகுப்பாளராக இருந்த கமல் தான் ஆரம்பத்தில் அல்டிமேட்டிற்கும் தொகுப்பாளராக இருந்து வந்தார். பின்னர் படப்பிடிப்பிற்காக விலகி கொண்ட கமலுக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.
இதற்கிடையே வனிதா காரணம் கூறாமல் வெளியேறினார், தற்போது இந்நிகழ்ச்சி 7 வாரங்களை நிறைவு செய்துள்ள நிலையில், நிகழ்ச்சியில் இருந்து இதுவரை சுஜா வருணி, ஷாரிக், தாடி பாலாஜி ஆகியோர் தொடக்கத்திலேயே வெளியேறிவிட்டனர். அடுத்து நிகழ்ச்சியில் முக்கிய புள்ளியாக அனைவருடனும் மோதல்போக்கை கடைபிடித்த வனிதா சமீபத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில், சுரேஷ் சக்ரவர்த்தி கேபிஒய் சதீஷ் ஆகியோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். இந்நிகழ்ச்சியை தெகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் சமீபத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து நடிகர் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ்

அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது கோழி முட்டை டாஸ்க் நடந்துகொண்டிருக்கிறது இதில் போட்டியாளர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் தாக்கி விளையாடி வரும் நிலையில் நிரூப் ஜூலியை அசிங்கமாக திட்டும் வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில், ஜூலி அனிதாவிடம் பேசிக்கொண்டிருக்கும் நிரூப், ஜூலியை பார்த்து பொய் பேசுவாள் என்று சொல்கிறார், உடனே ஜூலி நிரூப்பிடம் வாக்குவாதம் செய்ய செல்கிறார். இதனால் கோபம் கொண்ட நிரூப், ஜூலியை அசிங்கமான வார்த்தையை பயன்படுத்தி திட்டிவிடுகிறார் இதை கேட்டு கடும் கோபமடைந்த ஜூலி நிரூபிடம் வாக்குவாதம் செய்து அவரை கண்டிக்கிறார். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதன்பிறகு என்ன நடக்கும், தொகுப்பாளர் சிம்பு இதற்கு என்ன சொல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே ஜூலி நிரூப் இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில். இவர்களுக்கு இடையே அவ்வப்போது ஆபாச வார்த்தை மோதலும் வந்துகொண்டுதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் இந்த முறை ஜூலி குறித்து நிரூப் பேசியது தவறு என்று சமூக வலைதளங்களில் பலரும் ஜூலிக்கு ஆதரவுக் குரல் தந்துகொண்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி இப்படி தரக்குறைவாக பேசும் நிரூப் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்று கேட்டு வருகின்றனர் ///

By vaithy