திருமணம் முடித்து வெறும் 49 நாளில் கணவன் வெளிநாடு செல்ல 26 வயது மனைவியின் கவுன்சிலிங் வந்து சொன்னது என்ன..!!

திருமணம் முடித்து வெறும் 49 நாளில் கணவன் வெளிநாடு செல்ல 26 வயது மனைவியின் கவுன்சிலிங் வந்து சொன்னது என்ன..!!

(மனைவியை பிரிந்து வெளி நட்டில் வாழ்வோர்க்கு சமர்ப்பணம். உங்கள் மனைவியும் இப்படி நடந்து கொண்டால் உடனடியாக வீடு வந்து சேருங்கள்)
*வாசித்து விட்டு கருத்துகளையும் கூறுங்கள

அன்று காலை தன் தோழியோடு இரண்டரை வயது மதிக்கத்தக்க குழந்தையுடன் ஒரு சகோதரி கவுன்சிலிங் செய்ய வந்திருந்தாள், உயர் தரம் வரை படித்த நிதானமான 26 வயது அழகான பெண் மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் செய்து 2 வயதில் ஒரு பிள்ளையும் உண்டு. அந்தப் பிள்ளையை கூட மிகவும் அழகாகவே வளர்த்து வைத்திருக்கும் இவளுக்கு என்ன நடந்தது என்ற எண்ணத்துடன் அவளுடன் கதை கொடுக்க.. கண்ணீர் வழிய “எனக்கு என்ன நடக்கிறது டாடக்டர்..”என்று அழுது கொண்டே ஆரம்பித்தாள்

திருமணம் முடித்து வெறும் 55 நாட்களில் அவளைக் கர்ப்பமாக்கி விட்டு வெளி நாடு சென்று பிள்ளைக்கு 2வயதாகும் போது தான் முதல் முறையாக பிள்ளையை பார்க்க நாட்டிற்கு வந்திருந்தான் அவளது கணவன். அவன் வெளி நாட்டில் இருக்கும் நாள் எல்லாம்,

“அங்கே இருக்க வேணாம் வந்து விடுங்கள், வந்து விடுங்கள்,”

“வாழ வீடு இருக்கு என் நகை எல்லாம் வித்து சரி சின்னதாக எதாச்சும் செய்யுங்கள்,”

” கஞ்சி குடித்துக் கொண்டு சரி வாழலாம், “

” முடிந்தால் நானும் வீட்டில் எதாவது தொழில் செய்கிறேன்,”

” எனக்கு உங்கள் பக்கத்திலேயே இருக்க வேணும்,”

” உங்கள பார்த்துக் கொண்டே வாழ வேண்டும், “

” எனக்குப் பெரிதாக எதுவுமே வேண்டாம்”
என்று உண்மை அன்பாலும், கணவன் மீதான காதலாலாலும், வேதனைப்பட்டு, கெஞ்சியும், அன்பாகவும் நச்சரிப்பாகவும் தினமும் கூறிக் கொண்டே இருந்திருக்கிறாள்,

என்றாலும் இன்னும் இரண்டு மாசம், மூன்று மாசம், இந்த முறை வந்தால் இனி மேல் நான் போகவே மாட்டேன் என்றெல்லாம் சமாளித்து கூறி ஒருவாரு இரண்டு வருடத்தை முடித்து நாட்டிற்கு வந்து சேர்ந்தார் அவள் கணவன்,

வெறும் 55 நாள் வாழ்ந்த இல்லற வாழ்க்கையை இனிமேல் இன்பமாக தொடர்ந்தும் வாழலாம், இனி மேல் என் பக்கத்திலேயே என் மனதின் காதலன் தினமும் இருப்பான் என்றெல்லாம் மனக்கோட்டை கட்டி புதிய வாழ்க்கைக்கு ஆனந்தமாக தாயாராகி இருக்கிறாள் இந்த பெண்.

அவனும் வந்து ஒரு மாதம் கடந்து செல்கையில் மீண்டும் கர்ப்பமானாள் அவள், அவனது லீவில் 2 மாதங்கள் கடந்ததும், மெதுவாக அவளிடம் சென்று நான் இன்னும் இரண்டு மாதத்திற்கு மாத்திரம் வெளி நாடு சென்று வந்துவிடுகிறேன்,

இத்தனை வருடம் வேலை செய்தமைக்காக என் கொம்பனி தரும் 5 இலட்சம் பணத்தை கையில் எடுத்த உடன் அடுத்த விமானத்தில ஏறி வீட்டில் இருப்பேன், அந்த பணத்தையும் சேர்த்து வீட்டுக்கு முன்னால் கடை ஒன்று திறப்போம், அப்போ இருவரும் ஒன்றாகவே இருக்கலாம் என்றெல்லாம் அவளிடம் (பொய்) கூறி, சமாதானம் செய்து சரியாக 65 ஆவது நாள் நாட்டை விட்டு மீண்டும் பறந்து சென்று விட்டான்.

அவன் சென்ற ஏக்கத்தில் அந்தப் பச்சிளம் பிள்ளை அடிக்கடி அழுவதும், மழலை மொழியில் தகப்பனை தேடுவதும், ,போனை காதில் வைத்து டெடா டெடா என முத்தம் வைப்பதுமாக ஒரு மாதம் இரண்டு மாதம் ஆகி, மூன்று ஆகி கடைசியில் ஐந்து மாதமும் ஆகிவிட்டது, அவன் வந்து சேர்ந்த பாடில்லை.

கணவனின் அன்பிற்கு, ஆதரவிற்கு, அரவணைப்பிற்கு ஏங்கிய அவள் உள்ளம், அவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஏங்கிய அவளது காதல் உள்ளம் பொறுமையை மீறி கொந்தளித்து அடிக்கடி அவனிடம்,

” எப்போ வரப்போகின்றாய், எப்போ வரப்போகிறாய் ” என நச்சரித்து சண்டை பிடிக்க, அதில் இருந்து தப்பித்துக் கொள்ள அவளுடன் கதைப்பதையும், மெசேஜ் வைப்பதையும் வெகுவாக குறைத்து அவளை தவிர்க்கத் தொடங்கி இருக்கிறான்,

அவளும் வெறி பிடித்தவளைப் போல் தினமும் இரவு பகலாக நூறு, நூற்றைம்பது என்று கோல் மேல் கோல், மெசேஜ் மேல் மெசேஜ் வைத்தாலும், ஒரு மெசேஜ் இற்கும் பதில் வைக்காமல், வாரத்தில் ஒரு நாளோ இரண்டு நாளோ கடமைக்கு கதைத்து விட்டு கோலை வைத்து விடத் தொடங்கி உள்ளான்.

அதனால் இன்னும் மன உளைச்சல் கொண்ட அவளது நிலை தடுமாற்றம் கொள்ளத் தொடங்கியது, பிள்ளையை கவனிப்பதை விட, அன்றாட வேலைகளை செய்வதை விட போனும் கையுமாகவும், அறையைப் பூட்டிக் கொண்டும் இருக்க ஆரம்பித்து விட்டாள்.

போதாக் குறைக்கு வீட்டில் மாமியாரும், அவருக்கு பெற்றோல் ஊத்தும் மைனியும் சேர்ந்து அவளின் நிலையை புரிந்து கொள்ளாமல், அவளை கண்டதற்கெல்லாம் நச்சரிக்க, இத்தனை காலம் அமைதியாகவே இருந்தவள் பூகம்பமாக மாற வீடும் சண்டையில் இரண்டாக பிளந்தது,

தன் கோபத்தை காட்ட இடம் இன்றி அவளது பச்சிளம் பிள்ளை மீதும் அதை அடிக்கடி காட்டத் தொடங்கியவள், படிப்படியாக வீட்டுப் பொருட்களை தூக்கி வீசவும், உடைக்கவும், கண்ணாடியை. உடைக்கவும், தனியாக முனு முனுக்கவும் என ஒவ்வொரு நேரத்திற்கு ஒவ்வொரு குணத்தை காட்டத் தொடங்கியிருக்கிறாள்,

இதைப் பார்த்த குடும்ப #விஞ்ஞானிகள் ” இவளுக்கு பேய் மூடி விட்டது ” என்று உள்ளூர் மந்திரவாதிகள் துனையை பல முறை நாடியும் பேய் அவளை விட்டு ஓடிய பாடில்லை. அவன் கணவன் வந்து சேர்ந்த பாடுமில்லை,

விபரம் கேள்விப்பட்ட அவள் நெருங்கிய தோழி அவளை அழைத்துக் கொண்டு இங்கே வந்திருக்காவிட்டால் சில சமயம் தற்கொலை வரை கூட அவளது நிலை சென்றிருக்கலாம்.

ஆம் கணவன் மீது கொண்ட அளவு கடந்த பாசம், உண்மைக் காதலின் ஏக்கம் அவளை #டிப்ரெஷன் இல் தள்ளி, #பைத்தியக்காரி என்றும் மதம் பிடித்தவள் என்றும் பட்டம் கொடுத்து வைத்திருந்தது,

இவளுக்கு மருந்து கொடுத்து போதையில் தூங்கப் போட்டால், அவளுக்கும் அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் கூட ஆபத்தாகலாம், இவளுக்கு இப்போதைக்கு ஒரே மருந்து இவள் அன்பு வைத்த கணவனின் அன்பும், அரவனைப்பும் மாத்திரம் தான் என்பதை உணர்ந்து கொண்ட வைத்தியர் மூலம் தகவல் வெளி நாட்டுக்கு பறந்தது,

அவனும் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்பவனைப் போல் எமெர்ஜென்சியில் பறந்து வர தயாராகிக் கொண்டிருக்கிறார்.

உங்கள் மனைவியைப் பற்றி அவளின் தேவைகளை பற்றி புரிந்து கொள்ளாத, புரிந்துன்கொள்ள முடியாத, புரிந்தும் புரியாதது போல் நடிக்கும் முட்டாள் தனமான கணவனாக வாழவேண்டாம்.

₹ ஒரு சில பெண்களுக்கு ஒரு வாரம் இல்லை, ஒரு நாள் சரி தன் கணவனை பிரிந்து வாழ முடியாத அன்பும், பிணைப்பும் அந்தக் கணவனோடு இருக்கும், அவர்களுக்கு கணவன் பக்கத்தில் இருந்தால் போதும், பம்பரம் போல் சுழன்று சுழன்று அனைத்தையும் செய்வார்கள், அவர்களின் எனேர்ஜியே (Energy ) கணவன் தான்.

₹ இன்னும் சில பெண்கள் கடன், வறுமை போன்ற காரணங்கள் காரணமாக பொறுமை காத்தலும் அந்தப் பொறுமை காலமெல்லாம் கனிந்தே காணப்படாது.

₹ இன்னும் ஒரு கூட்டம் உண்டு, அவர்களுக்கு கணவனும் தேவை கிடையாது, பிள்ளைகள் மீது அக்கறையும் கிடையாது. பணம் வர வேண்டும், அதை வைத்து ஊர் சுத்தி திரிய வேண்டும்( இவர்களை பற்றி இங்கு கதைக்க தேவையே இல்லை)

₹ இன்னும் சில பெண்களுக்கு உடல் ரீதியான தேவைகள் அதிகமாக தேவைப்படலாம், ஏன் சில சமயம் அவர்களுக்கு தினமும் இல்லறத்தில் ஈடுபட்டே ஆக வேண்டும் என்று கூட இருக்கலாம்.
( இதில் எந்த அசிங்கமோ, பிழையோ கிடையாது)

பெண் என்றால் தன் உணர்ச்சியை அடக்கி மறைத்துக் கொள்ள வேண்டும், ஆண் தான் அதனை வெளிக்காட்ட வேண்டும், போன்ற எண்ணங்கள் உங்களிடம் இருந்தால் அதனை குழி தோண்டி இன்றே புதைத்து விடுங்கள்,

அவளுக்கு அந்த தேவை இருந்தால் அதை அடக்கிக் கொண்டிருக்க வேண்டிய எந்த விதத் தேவையும் கிடையாது. அதனை ஹலாலான விதத்தில் தன் கணவனிடம் தாராளமாக ஒரு முறையோ, பல முறையோ கேட்டு வாங்கி அனுபவித்திடும் உரிமை அவளுக்கு முழுமையாக, தாராளமாக உண்டு.

சில சமயம் இது போன்ற தேவையுடையவள் உங்கள் மனைவியாக அமைந்து நீங்கள் வெளி நாட்டில் காலமெல்லாம் குப்பை கொட்டிக் கொண்டும், அந்த நாட்டில் இருக்கும் எதோ ஒரு வெளி நாட்டுக்காரியிடம் உங்கள் தேவையை முடித்துக் கொண்டும் மனைவியை கிடப்பில் போட்டு வைத்தால். அவள் கூட பொறுமையை இழந்து இது போன்ற நிலைக்கு ஆகலாம் அல்லது

காலம் மாறிவிட்டது,
ஒரு பெண் தன்னை கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும், உணர்ச்சிகளை தூண்டக் கூடிய எத்தனையோ விடயங்கள் உள்ளங்கைகளுக்குள் வந்துவிட்டது. இவர்களை குறி வைத்து கழுகள் குடும்பத்திலும், சமூகத்திலும் சுற்றிக் கொண்டு இருக்கின்றனர். எங்கேனும் பிசகிடலாம்.

இது போன்ற நிலைகளில் இருந்து தம் பொண்டாட்டியை பாதுகாக்கவும், நச்சரிப்புகளில் இருந்து தப்பிக்கும் கேடயம் எனவும் நினைத்துக் கொண்டு, வெளி நாட்டில் வாழும் சில #அரவைக்கடுகளின் பேச்சு வழக்கில் பாவிக்கும் ஒரு சொல் தான்,

” வெக்கெஷன் போனால் #புள்ளயகுடுத்துரனும், அப்போ தான் அவள்கள் அடங்கி இருப்பார்கள்” என்பதாகும்.

வெட்கம் கெட்டவர்களே!
உங்கள் மனைவியை இப்படி கேவளமாக கதைக்க மானம், ரோஷம், சூடு, சொரனை கிடையாதா?
இவர்கள் பிள்ளையை கொடுத்து விட்டு (கர்ப்பமாக்கி விட்டு) வெளி நாடு சென்று விட்டால், மனைவியானவள் கர்ப்பம், பிள்ளைப் பேறு, பிள்ளை வளர்த்தல் என்று அலைந்து, கலைத்துப் போவதால் தமது உடல் தேவை மறக்கப்பட்டு வேறு ஆண்களிடம் வழி தவறி செல்ல மாட்டர்கள், தொன தொனப்பும் குறைவாகவே இருக்கும்,

அதற்குள் அப்படி இப்படி என இரண்டு வருடங்கள் ஆகும் போது அடுத்த வெக்கேஷன் வந்துவிடும், அப்போது நோகாமல் நுங்கு நின்னலாம் என,

₹ தன் மனைவியின் உண்மை தேவை என்ன?

₹ அவளின் அன்பின் ஆழம் என்ன?

என்பதை புரிந்து கொள்ளாது திட்டம் போட்டவர்களில் ஒருவர் தான் இவளின் கணவனும், திட்டம் பிசகி கை மீறும் தறுவாயில் தப்பித்து விட்டார்.

புரிந்து கொள்ளுங்கள்,
ஒரு கணவன் என்பவன் வெறும் பணம் சம்பாதிக்கும், குழந்தை உருவாக்கும் இயந்திரமாக இருப்பதை எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை,

அவளுக்கு அன்பு செலுத்த, அரவனைக்க, ஆதரவு கொடுக்க, பாதுகாப்பு கொடுக்க, தேவையான இன்பங்களை அனுபவிக்க ஒரு துனையகவே கணவனை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இளமைகாலமெல்லாம் வெளி நாட்டில் செலவு செய்து வாழ்வை நாசம் செய்யாதீர்கள்

இவற்றை உங்கள் மனைவி உங்களிடம் எதிர்பார்க்க இல்லை என்றால் நீங்கள் ஒரு நல்ல கணவனாக வாழ்க்கையில் தோத்தவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதை உணராமல் மனைவியின் நச்சரிப்பை பார்த்து “என் பொண்டாட்டிக்கு பைத்தியம்” என கூறித் திரிந்தால் உண்மையில் பைத்தியம் அவளுக்கு கிடையாது.