நிருப்பை தற்பொழுதும் காதலிக்கும் அபிராமி!! பிக்பாஸ் வீட்டில் நடக்கும் ரொமான்ஸ் சீன்!!

விஜய் தொலைக்காட்சி என்றாலே மக்களுக்கு உடனே ஞாபகம் வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சி மீது மக்கள் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள் ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஒரு நிகழ்ச்சி 24 மணி நேரமும் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது இது ஏற்கனவே பங்கேற்ற பல மோசமான போட்டியாளர்களை மட்டுமே களமிறக்கியுள்ளது பிக்பாஸ் குழு இதனால் இங்கு பரபரப்புக்கும் சண்டைக்கும் பஞ்சமே இல்லை.இந்நிலையில் நிருப் ஏற்கனவே யாஷிகா ஆனந்த் மற்றும் அபிராமியை காதலித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே தற்போது யாஷிகாவை பிரிந்து இருந்திருந்தாலும் யாஷிகா ஆனந்த் நிருப்பைப் பார்த்த பிக்பாஸ் வீட்டின் உள்ளே வந்தபோது கண்கலங்கி நிருப் நெகிழ்ச்சி அடைந்தது அனைவரும் அறிந்த ஒன்று.

தற்போது அபிராமி உடன் வெகு நாட்களாக ஒரே வீட்டில் 24 மணி நேரமும் தங்கியுள்ள நிருப் என்னதான் பழசை எல்லாம் இவர்கள் மறந்து விட்டதை போல காட்டிக்கொண்டாலும் அபிராமி அவ்வப்போது நிருப்பை காதல் பார்வையால் பார்ப்பதை ரசிகர்கள் கண்டுபிடித்து தற்போது இணையதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள் அதிலும் காதலர் தினத்தன்று இருவரும் பேசிய வீடியோக்கள் எல்லாம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ரசிகர்களே இந்த ஜோடி நன்றாக இருக்கிறது என்று ஒருபுறம் சேர்த்து வைக்க முயற்சி செய்கிறார்கள் இந்நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து இருவரும் ரசிகர்களின் ஆசை நிறைவேற்றுவார்களா என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

By vaithy