நிருப் மற்றும் அபிராமியால் கடுப்பான பாலா !!

நிருப் மற்றும் அபிராமியால் கடுப்பான பாலா !! அடபாவமே இப்படி ஒரு பிரச்சனயா !!

விஜய் தொலைக்காட்சி என்றாலே மக்களுக்கு உடனே ஞாபகம் வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சி மீது மக்கள் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள் ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஒரு நிகழ்ச்சி 24 மணி நேரமும் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது இது ஏற்கனவே பங்கேற்ற பல மோசமான போட்டியாளர்களை மட்டுமே களமிறக்கியுள்ளது பிக்பாஸ் குழு இதனால் இங்கு பரபரப்புக்கும் சண்டைக்கும் பஞ்சமே இல்லை இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு KPY சதீஷ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் WILDCARD என்ட்ரி ஆக உள்ளே வந்தனர் இப்பொழுது கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்க்கில் 2 அணிகளாக ஹவுஸ் மேட்சுகள் பிரிக்கப்பட்டு எந்தப் பொருளை யாரிடம் கேட்டாலும் காசு கொடுத்துதான் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதனிடையே தாமரைச்செல்வி வழக்கம்போல் பாசத்தை காண்பிப்பதாக நினைத்து நிருப் மற்றும் அனிதா சம்பத்திற்கு பொருட்களை காசில்லாமல் வழங்கினார் இதை கவனித்துக் கொண்டிருந்த சக அணியை சேர்ந்த அபிராமி அங்கிருந்து நேராக ஓடி வந்து பாலாவிடம் போட்டுக்கொடுக்க கடுப்பான பாலா அடுத்த நொடியே எழுந்து போய் தாமரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இதை சற்றும் எதிர்பார்க்காத தாமரை பதில் ஏதும் பேச முடியாமல் திணறி நிற்க வழக்கம்போல் பாலா படபடவென வெடித்து விட்டு அங்கிருந்த தேங்காயை தூக்கி கீழே அடித்து கத்தியை தூக்கி வீசிவிட்டு தாமரையை முணுமுணுத்தபடியே அங்கிருந்து செல்கிறார் இதைப் பார்த்த மற்ற போட்டியாளர்கள் செய்வதறியாது தவித்தனர்.

By vaithy