காசில்லாமல் பஞ்சப்பாட்டு பாடும் நயன்தாரா.. ஆனா தனி விமானத்தில் சிவனுடன் ஊரு சுத்த இவ்வளவு லட்சமா.?

காசில்லாமல் பஞ்சப்பாட்டு பாடும் நயன்தாரா.. ஆனா தனி விமானத்தில் சிவனுடன் ஊரு சுத்த இவ்வளவு லட்சமா.?

தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகளை வெளிக்கொண்டு வருவது அவ்வளவு சாத்தியம் அல்ல. ஏனென்றால் அரசியல் கலந்த சினிமாவில் வெற்றி பெறுவது கடினம்தான். அதையும் தாண்டி இன்று லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நயன்தாரா.

நயன்தாரா,விக்னேஷ் சிவனுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறார், விரைவில் திருமணம் என்று தெரிவித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் சமீபத்தில் அளித்த பேட்டியில் எப்பொழுது காதல் போர் அடிக்கிறதோ, அப்போது திருமணம் செய்து கொள்வோம் என்று தெரிவித்துள்ளார் விக்னேஷ்.

இதற்கு என்ன அர்த்தம் என்பதை ரசிகர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். நயன்தாரா,விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து நானும் ரவுடிதான் இரண்டாம் பாகம் படபிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு நெற்றிக்கண் என்ற படத்தை நயன்தாரா நடிப்பில், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் எடுப்பதாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதற்கு முக்கியமான காரணம் கையில் காசில்லை என்பதை தெரிவித்துள்ளனர், இதைக்கேட்டால் சிரிப்பு தான் வருகிறது.

ஏனென்றால் சில தினங்களுக்கு முன்பு ஓணம் பண்டிகைக்கு தனியார் விமானத்தைப் பிடித்து நயன்தாரா, விக்னேஷ் சிவன் வந்த கதை தமிழ்நாடு முழுவதும் வைரலானது. ஆன் ஸ்க்ரீன் மட்டுமல்லாமல் ஆப் ஸ்க்ரீன்லும் நயன்தாரா தனது உண்மையான முகத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

காசு இல்லாமல் படம் எடுக்க முடியாத நயன்தாரா, விக்னேஷ் சிவன் தனி விமானத்தில் வருவதற்கு கிட்டத்தட்ட 40 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். ஆனால் யார் தலையில் மிளகாய் அரைப்பதை இப்படிப் பொய் கூறி வருகின்றனர் என்று தெரியவில்லை.

இதற்கும் மேலாக 5 கோடி வரை சம்பளம் வாங்கும் நயன் தாராவிடம் காசில்லை என்றால் நம்பமுடியவில்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

நடிகை நயன்தாரா தனது முதல் படத்திற்காக கேரளாவில் இருந்து எப்படி வந்தார் என்ற சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. மலையாள படங்களில் நடித்த நயன்தாரா, தமிழில் சரத்குமாரின் ஐயா படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

ரஜினி, அஜித், விஜய் என முன்னணி நடிகர்கள் பலருடனுடம் இணைந்து நடித்துள்ள நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

அண்மையில் நடிகை நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவன் மற்றும் குடும்பத்தினருடன் ஓணம் பண்டிகையை கொண்டாடினார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. அவரது போட்டோக்களால் #Nayanthara என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டானது.

ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக நடிகை நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் சொந்த ஊரான கொச்சி சென்றார். இந்நிலையில் நயன்தாரா தமிழில் தனது முதல் படத்தில் நடிக்கும் போது எப்படி கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஐயா படத்தில் நடிப்பதற்காக தனது அப்பாவை அழைத்துக் கொண்டு அரசு பேருந்தில் வந்தாராம் நடிகை நயன்தாரா. பேருந்தில் கோயம்பேடு வந்து இறங்கிய அவரை பீஆர்ஓ ஜான்சன் ரிசீவ் செய்துள்ளார். மேலும் வட பழனியில் உள்ள ஒரு ஹோட்டலில் நயன்தாராவையும் அவரது அப்பாவையும் தங்க வைத்தாராம். இந்த தகவலை யூ டியூபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முதல் படத்திற்கு அரசுப் பேருந்தில் வந்த நடிகை நயன்தாரா இன்று தனி விமானம் மூலம் பயணிக்கிறார் என்றால், அதற்கு காரணம் அவரது கடின உழைப்பும் அவரது திறமையும் தான் என்கிறார்கள் கோலிவுட்காரர்கள். காதல் தோல்வி, செகன்ட் ஹீரோயின், எடுப்படாத கேரக்டர்கள் என பல படிகளை விடாமுயற்சியுடன் தாண்டி வந்துள்ளார் நயன்தாரா. தனக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வரும் நயன்தாரா, கோடான கோடி ரசிகர்களை கொண்டுள்ளார்.