பாலாவுக்கும் ஜுலிக்கும் ரொமான்ஸ்ஸா !!

பாலாவுக்கும் ஜுலிக்கும் ரொமான்ஸ்ஸா !! என்னடா நடக்குது இங்க !!

உலகளவில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் அறிமுகமானது. விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி அந்த ஆண்டே ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக மாறியது. இந்நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பு என்றால் அது கமல்ஹாசன் தான். அவர் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், கடைசியாக முடிந்த 5-வது சீசன் வரை அவரே தொகுத்து வழங்கினார். இந்தியில், பிக்பாஸ் நிகழ்ச்சி பிரத்யேகமாக ஓடிடிக்கு என தயாரிக்கப்பட்டு, வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது தமிழிலும் அதே பார்முலாவை பின்பற்றி,… ஓடிடிக்கென பிரத்யேகமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி 4 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கடந்த 3 வாரங்களாக கமல் தொகுத்து வழங்கிய நிலையில், அவர் அரசியல் பணிகள் மற்றும் சினிமா ஷூட்டிங் இருப்பதால்…. தற்காலிகமாக இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். …தற்போது அவருக்கு பதில் நடிகர் சிம்புதொகுத்து வழங்கி வருகிறார். முன்னதாக வைல்ட் கார்ட் என்ட்ரியாக விஜய் டிவி ‘கலக்க போவது யாரு’ புகழ் சதீஷ் பிக் பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் வந்துள்ளார்..இவரை வரவேற்பதாக கூறி முட்டை, ஷாம்பு, மஞ்ச தண்ணி என சதீஷை பாடாய் படுத்தும் ப்ரோமோ வெளியாகியுள்ளது…இந்நிலையில் பாடல்கள் குறித்து வரைந்து காட்ட மற்ற போட்டியாளர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.. என கூறப்பட்டுள்ளது.. போட்டியில் போது போட்டியாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது… இது குறித்து ப்ரோமோ வெளியாகியுள்ளது…

By vaithy