பாவ்னி அமிர் காதலை கொச்சை படுத்திய அனிதா சம்பத் !!

பாவ்னி அமிர் காதலை கொச்சை படுத்திய அனிதா சம்பத் !! தக்க பதிலடி கொடுத்த அமீர்!!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனிதா, பாவ்னி அமீர் காதலைக் குறித்து மோசமாக பேசியுள்ள நிலையில், இதற்கு அமீர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்ட பாவ்னியின் சோக கதை அனைவரையும் கண்கலங்க வைத்தது. இந்த சீசனில் கலந்து கொண்ட அமீர் பாவ்னியைக் காதலிப்பதை போல் பல செயல்களை செய்து வந்தார். தற்போதும் இவர்கள் வெளியே ஒன்றாக பல இடங்களுக்கு சென்று நேரத்தினை செலவிட்டு வருகின்றனர்.அமீரின் காதலுக்கு பாவ்னி மறுப்பு தெரிவித்தாலும், அமீர் தனது காதலில் உறுதியாக இருந்து வருகின்றார். இதனை பலமுறை நேரடியாக பாவனியிடமும் பிக்பாஸ் வீட்டில் கூறியுள்ளார்.இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட்டில் பாவ்னி குறித்து பேசிய அனிதாவிற்கு பதிலடி கொடுத்துள்ளார் அமீர். தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனிதா, தொடர்ந்து மற்றவர்களை பற்றி தான் அதிகம் குறை சொல்லி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் பாவ்னி குறித்து பேசி இருந்தார்.அதில், பாவ்னி என்ன விளையாட்டு விளையாடினார் என்று அவர் எல்லாம் மூன்றாவது இடத்திற்கு வந்து இருக்கிறார். சொல்லப்போனால் நீ வந்து இருக்க வேண்டும் நிரூப். பாவ்னி பிக்பாஸில் அமீரை லவ் பண்ணதை தவிர வேறு ஒன்றும் பண்ணவில்லை என்று கூறியுள்ளார்.அவரின் ரசிகர்களால் தான் அவர் பைனல் வரை வந்தார் என்று கூறி இருந்தார் அனிதா. இந்த வீடியோவால் பாவ்னியின் ரசிகர்கள் அனிதாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த வீடியோவை கண்ட அமீர், பாவ்னி குறித்து பேசிய அனிதா மற்றும் நிரூப், சுருதி, தாமரைக்கு அமீர் பதிலடி கொடுத்துள்ளார். அதில், எதுவும் செய்யாமல் யாரும் இறுதி போட்டி வரை செல்லவில்லை.தன்னந்தனியாக நின்று கேமை விளையாடியது பாவ்னி மட்டும் தான் என்று கூறி இருக்கிறார்.இந்த பதிலுக்கு, பாவ்னி நன்றி என்று பதில் தெரிவித்துள்ளார்.

By vaithy