பாஸ், சன் டிவியில நாட்டாமை படம் பாத்தீங்களா இன்னிக்கி – அதுல இந்த சீன்ல வந்த நடிகை லிங்கா படத்திலும் நடித்திருக்காங்க.

பாஸ், சன் டிவியில நாட்டாமை படம் பாத்தீங்களா இன்னிக்கி – அதுல இந்த சீன்ல வந்த நடிகை லிங்கா படத்திலும் நடித்திருக்காங்க.

தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்களின் ராஜாவாக திகழ்ந்து வருபவர் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். 90ஸ் காலகட்டத்தில் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தவர் கே எஸ். ஹிட் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்தது நாட்டாமை படம். இந்த படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோரது காமெடி உச்சத்தை எட்டியது. அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் இவர்களது காமெடி.

அப்போது ஒரு சீனில் கவுண்டமணிக்கு பெண் பார்க்க செல்லும் போது, பெண்ணின் அப்பா உட்கார்ந்து மிக்ஸர் மட்டுமே சாப்பிட்டு கொண்டிருப்பார். அந்த காமெடி இன்றளவும் பேசப்பட்டு கொண்டிருப்பார். அந்த படத்தில் மிக்சர் சாப்பிடும் நபர் வேறு யாரும் இல்லை படப்பிடிப்புத் தளத்தில் ஸ்விட்ச் போர்டு அருகில் உட்கார்ந்து பணிபுரிந்து கொண்டு இருந்தவர் தான் அந்த நபர். அவரை நடிக்க சொன்ன போது அவர் மிகவும் பயந்து போய் எனக்கு வசனம் வராது சார் என்று சொன்னார்.

நான் சும்மா ஒக்காருயா என்றேன். பின்னர் மிக்சர் வாங்கி வர சொல்லி, மிக்சர் சாப்பிட்டுட்டு இருப்பா, உனக்கு வசனமே கிடையாது என்று கே எஸ் ரவிகுமார் கிடையாது ஒரு பேட்டியில் கூறி இருந்தார். அதே போல அதே காட்சியில் வரும் பெண் பற்றி யாரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. இவர் நாட்டாமை படத்திற்கு பின்னர் லிங்கா படத்தில் கூட நடித்து இருக்கிறார்.

ஆம், நாட்டாமை படத்தை இயக்கிய கே எஸ் ரவி குமார், சூப்பர் ஸ்டாரை வைத்து 2014 ஆம் ஆண்டு ‘லிங்கா’ படத்தை இயக்கி இருந்தார். இந்த ‘லிங்கா’ அனுஷ்கா, சோனாக்ஷி, சந்தானம், தாடி பாலாஜி என்று பலர் நடித்தனர். இந்த படத்தின் ஒரு சிறு காட்சியில் நாட்டாமை படத்தில் வந்த அந்த பெண்ணை நடிக்க வைத்துள்ளார் கே எஸ் ரவிக்குமார்.