பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிம்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிம்பு! கமல் இடத்தை நிறப்புவாரா !!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முந்தைய ஐந்து சீசன்களில் இருந்து 16 முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் விக்ரம் படத்தின் தேதி சிக்கல்கள் காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில் கால்ஷீட் காரணமாக பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை என்று கூறினார். பிக்பாஸ் 6க்கு மீண்டும் வருவேன் என்று உறுதியளித்தார்.பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கமல்ஹாசனுக்குப் பதிலாக யார் தொகுத்து வழங்க போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்பை கிளப்பி உள்ளது.

இதில் சிம்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக விஜய்டிவி நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும், அடுத்த வார இறுதி எபிசோடில் இருந்து பிஸியான ஹீரோ பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது.வெங்கட் பிரபு இயக்கிய ‘மாநாடு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இழந்த இடத்தை மீண்டும் பிடித்த சிம்பு, கவுதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தனிந்து காடு’ படத்தை முடித்துள்ளார். கௌதம் கார்த்திக் நடிக்கும் பத்து தலை மற்றும் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் ஆகிய படங்களை மார்ச் முதல் வாரத்தில் எடுக்க உள்ள நிலையில் இவர் தனக்கே உரிய பாணியில் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு மற்றும் கமல் இடையேயான ஒப்பீடுகள் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

By vaithy