பிரபல ஹீரோ என்னை காதலித்தார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உளறிக் கொட்டிய வனிதா!!

பிரபல ஹீரோ என்னை காதலித்தார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உளறிக் கொட்டிய வனிதா!!

விஜய் தொலைக்காட்சி என்றாலே மக்களுக்கு உடனே ஞாபகம் வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சி மீது மக்கள் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள் ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஒரு நிகழ்ச்சி 24 மணி நேரமும் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது இது ஏற்கனவே பங்கேற்ற பல மோசமான போட்டியாளர்களை மட்டுமே களமிறக்கியுள்ளது பிக்பாஸ் குழு இதனால் இங்கு பரபரப்புக்கும் சண்டைக்கும் பஞ்சமே இல்லை.இந்நிலையில் நேற்று நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது.

அதாவது ஒருவர் மூன்று கதைகளை கூற வேண்டும் அதில் இரண்டு கதைகள் பொய்யாகவும் ஒரு கதை உண்மையாகவும் இருக்க வேண்டும் என்பதே ஆகும் இதில் வனிதா கதை கூறும் பொழுது தன்னை ஒரு இசையமைப்பாளர் காதலித்ததாகவும் பிரபல ஹீரோ காதலித்ததாக கூறினார் அதுமட்டுமில்லாமல் தான் ஒரு இசையமைப்பாளரை உருகி உருகி காதலித்ததாகவும் கூறினாள் இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது வனிதாவை காதலித்த அந்த கதாநாயகன் யார் என்று சமூக வலைத்தளங்களில் பேச்சு அடிபட்டு வருகிறது அதேபோல் வனிதா கூறியதில் உண்மை எதுவென்று அவரே கூறாமல் ஒருமாதிரியாக சமாளித்த தான் பெரும் குழப்பத்தில் ரசிகர்கள் ஆழ்ந்துள்ளனர் ஏற்கனவே 3 முறை வனிதா திருமணம் செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது தற்பொழுது நான்காவதாக ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தது.

By vaithy