ரசிகர்களை வாய்பிளக்க வைத்த இயக்குனர் ஷங்கரின் மகள்!!

ரசிகர்களை வாய்பிளக்க வைத்த இயக்குனர் ஷங்கரின் மகள்!! புடவையில் இவ்ளோ அழகா இருக்காங்களே!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் ஷங்கர் அவர் திரைப்படம் என்றாலே படத்தில் பல அழகிய இடங்கள் தொழில்நுட்பங்கள் அதிக செலவில் பயன்படுத்தப்படும் தற்பொழுது இயக்குனர் ஷங்கரின் மகள் நடிக்க வந்துள்ளார் இயக்குனர் ஷங்கரின் மகள் என்பதால் இவர் எளிதில் நடிக்க வரவில்லை. இவர் ஆரம்ப கட்டத்தில் இருந்து நடனம் நடிப்பு ஆகியவையும் கற்றுக் கொண்டுதான் வந்துள்ளாராம். தற்பொழுது கார்த்தியுடன் இணைந்துள்ள ஷங்கரின் மகள் விரைவில் பெரிய பெரிய நடிகர்களுடன் நடிக்க கண்டிப்பாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது இந்நிலையில் தற்போது புடவை கட்டிய ஷங்கரின் மகளுடன் கார்த்திக் காதல் செய்யும் பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

போட்டோ விலேயே இவர் இவ்வளவு அழகாக இருந்தால் இன்னும் வெளியாகும் பாடல் காட்சிகள் மற்றும் காதல் காட்சிகளில் எவ்வளவு அழகாக இருப்பார் என நெட்டிசன்கள் வர்ணித்து வருகின்றனர்கொம்பன் படத்திற்கு பிறகு டைரக்டர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் விருமன். சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்தில் ஹீரோயினாக, டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி அறிமுகமாகி உள்ளார். பருத்திவீரன் படத்திற்கு பிறகு மதுரை பின்னணியில் கார்த்தி நடித்துள்ள இந்த படத்தின் ஷுட்டிங் டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து விருமன் படத்தில் கார்த்தி– அதிதியின் ரொமான்டிக் ஸ்டில்கள் வெளியிடப்பட்டுள்ளன. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விருமன் ஃபஸ்ட்லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

By vaithy