“வேலையில்லாதவர்களின் பொழுதுபோக்குக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை” – லஷ்மி மேனன்

“வேலையில்லாதவர்களின் பொழுதுபோக்குக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை” – லஷ்மி மேனன்

ஒரு ஷோவுக்காக பாத்திரங்கள் கழுவுவதும், டாய்லெட்டைக் கழுவுவதும் எனக்கு அவசியமில்லை. என் முடிவுகளை, தேர்வுகளைக் கேள்விகேட்க உங்களுக்கு உரிமையுமில்லை என பதிலளித்திருக்கிறார் லஷ்மி மேனன்.

வேலையில்லாமல் இருப்பவர்களின் பொழுதுபோக்குக்காக, ஒரு ஷோவில் கலந்துகொண்டு பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. நான் எனது வீட்டில் பாத்திரங்களைக் கழுவலாம். ஆனால் ஒரு ஷோவுக்காக பாத்திரங்களைக் கழுவுவதும், தனிப்பட்ட வாழ்க்கையை போட்டுக்காட்டுவதும், சண்டை போடுவதும் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நான் பிக்பாஸ் ஷோவில் கலந்துகொள்வதாக எழும் வதந்தி பொய்யானது. என்று லஷ்மி மேனன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.

பலரும் தான் பிக்பாஸில் கலந்துகொள்வதாக வதந்தி பரப்புவதாகவும், சமூக வலைதளங்களில், சில செய்திகளில் யூகங்களாக எழுதுவதாகவும் தெரிவித்த லஷ்மி மேனன், எப்போதும் அந்த நிகழ்ச்சியில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை எனவும், எனது தனிப்பட்ட வாழ்க்கையை ஷோவுக்காக யார் முன்பாகவும் வாழ்ந்துகாட்ட எனக்கு அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முழு வீடியோ கீழே உள்ளது.