15 குழந்தைகளை பெற்றெடுத்துவிட்டு 16வது குழந்தையுடன் கர்ப்பமாக இருக்கும் பெண்!!

15 குழந்தைகளை பெற்றெடுத்துவிட்டு 16வது குழந்தையுடன் கர்ப்பமாக இருக்கும் பெண்!!

அமெரிக்காவில் 15 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் 16வது குழந்தையுடன் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர்களின் பெரிய குடும்பம் குறித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை சேர்ந்தவர் Carlos. இவர் மனைவி Patty Hernandez (38). இந்த தம்பதிக்கு 15 குழந்தைகள் உள்ள நிலையில் Patty 16வது முறையாக கர்ப்பமாக உள்ளார். இதில் 5 ஆண் குழந்தைகள் மற்றும் 10 பெண் குழந்தைகள் அடக்கமாவார்கள்.

இவர்களில் 6 பேர் இரட்டையர்கள் ஆவர். குழந்தைகள் அனைவரின் பெயரும் C என்ற எழுத்தில் தான் தொடங்குகிறது. Pattyக்கு அடுத்தாண்டு மே மாதம் 16வது குழந்தை பிறக்கவுள்ளது.

இந்த தம்பதி வாரத்துக்கு குடும்பத்தினருக்கு தேவையான மளிகை சாமான்கள் மற்றும் துணிகளுக்காக மட்டும் £375 செலவிடுகிறார்கள். இதோடு குடும்பத்தினருடன் சேர்ந்து பயணிக்க ஒரு பேருந்தை வாங்க திட்டமிட்டுள்ளனர்.

Patty கூறுகையில், அனைத்து குழந்தைகளையும் கவனித்து கொள்வது மிகவும் சவாலான விடயம். ஒரே நேரத்தில் பலரும் அழும் போது அது எனக்கு மன அழுத்தத்தை கொடுக்கும், ஆனாலும் தாயாக இருப்பதை ஆசிர்வாதமாக கருதுகிறேன்.

2008 ஆண்டு முதல் முறையாக கர்ப்பமடைந்தேன்.ஒரு குழந்தை பிறந்த அடுத்த 3 மாதத்துக்கு பின்னர் பொதுவாக மீண்டும் கர்ப்பமடைந்து விடுவேன்.

எல்லா குழந்தைகளும் என்னுடையது தானா என என்னிடம் பலரும் கேட்பார்கள், எனக்கு இவ்வளவு குழந்தைகள் பிறக்கும் என நான் நினைக்கவே இல்லை என கூறியுள்ளார்.